• Jun 14 2026

விஜய் மில்டனின் அடுத்த மாஸ்டர் பீஸ்! 'காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

shali / 2 months ago

Advertisement

Listen News!

‘கோலி சோடா’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்ற இயக்குநர் விஜய் மில்டன், தற்போது ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்யும் அவரின் பாணியில் உருவாகும் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.


இந்தப் படத்தில் பரத், சுனில், ஆரி அர்ஜுனன், ராப் பாடகர் பால் டப்பா, அம்மு அபிராமி, கிஷோர் டிஎஸ், விஜேதா, பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்தப் படத்திற்கு சாம் C. S. இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ படத்தின் டீசர் வரும் 11ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வைரலாகி, படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

Advertisement

Advertisement