• May 15 2026

விஜய் ஒழுக்கமானவர் இல்லை.. இயக்குனர் இராஜகுமாரன் அதிரடி பேட்டி

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய், தன்னுடைய எளிமை, நடிப்பு, ஸ்டைல் என்பவற்றின் மூலம் ஏராளமான ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்தவர்.

எனினும், தற்போது சினிமா துறை சார்ந்தும், அரசியல் ரீதியாகவும் மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல சர்ச்சைகளை சந்தித்து வருகின்றார். இதற்கு பலரும் ஆதரவாகவும், எதிராகவும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விஜய் பற்றி இயக்குனர் ராஜகுமாரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி அவர் கூறுகையில், வாரிசு படத்தில் விஜய் சார் ரொம்ப மோசமாக நடித்திருந்தார். 


அப்பாவைப் பார்த்து கிண்டல் செய்வது போலத்தான் அந்த படம் இருக்கும். விஜய்க்கு பொறுப்பு இல்லையா? அவ்வளவு பெரிய இடத்தில் இருந்து அப்பாவை திட்டுர மாதிரி நடித்தால், உங்களை பின்தொடரும் ரசிகன் அவன் அப்பாவை திட்ட மாட்டானா? 

நீங்கள் உங்கள் அப்பாவை திட்டுங்கள், கிண்டல் பண்ணுங்கள். ஆனால் அதையே ஏன் படத்தில் வைத்து ரசிகர்களை கெடுக்கிறீர்கள்? அஜித் சார் இப்படி நடிக்க மாட்டார். அவருக்கென்று ஒரு ஒழுக்கம் வைத்திருக்கிறார். சமூகத்துக்கு எதிரான காட்சிகளில் நடிக்க கூடாது என்ற ஒழுக்கம். அந்த ஒழுக்கம் விஜய்க்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement