விஜய் குறித்து சமீபத்தில் எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவருடன் நடித்த நடிகை வனிதா உருக்கமான கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
வனிதா கூறுகையில், விஜய் இவ்வளவு பெரிய இடத்தை அடைந்தது எளிதாக இல்லை என்றும், ஆரம்பகாலங்களில் அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை தான் நேரில் பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், இன்றைய அரசியல்வாதிகளை பற்றி பேசிய வனிதா, "இன்னைக்கு பேசுறவங்க பேசுவாங்க. இவங்கதான் பிரச்சாரத்துக்கு வருவாங்க. அந்த நேரம் வெயில்ல நிக்கறாங்க. ரொம்ப கேம்பெயினிங் பண்றாங்க. அதுக்கப்புறம் போய் ஏசி ரூம்லதான் அஞ்சு வருஷத்துக்கு உட்காருறாங்க.." என்று அரசியல்வாதிகளை நேரடியாக சாடினார்.

மேலும், விஜய்க்கு சொகுசு வாழ்க்கை மட்டுமே தெரியும் என சிலர் விமர்சிப்பது குறித்து, எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் சொகுசு வாழ்க்கை இல்லையா என கேள்வி எழுப்பினார். அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்களின் வாழ்க்கை முறையை ஒப்பிட்டு பேசுவது தவறானது என்றும் தெரிவித்தார்.
விஜய் இன்று பெறும் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவு அவரது கடின உழைப்பின் பலன் என்றும், அதை பணத்தால் வாங்கவே முடியாது என்றும் வனிதா உறுதியாக கூறினார்.
அத்துடன், ரசிகர்கள் காட்டும் அன்பு உண்மையானது என்றும், அதை விமர்சிப்பது சரியல்ல என்றும் வலியுறுத்தினார். இந்த கருத்துகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளன.
Listen News!