• May 14 2026

விஜய் - திரிஷாவுக்கு திருமணம்; நாங்க மெஹந்தி ஃபங்ஷனுக்கு போவோம்.! பிரபல நடிகை அதிர்ச்சி

Aathira / 4 days ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ள நடிகர் விஜய் இன்றைய தினம் முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருடைய அரசியல் வாழ்க்கை மட்டுமல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வதந்திகளும் சினிமா உலகம் தாண்டியும் பெரும் பேசுபொருளாக இருந்து வருகின்றன.

இந்த நிலையில் பிரபல இந்தி நடிகையும் சமூக வலைதள கண்டென்ட் கிரியேட்டருமான ராக்கி சாவந்த், தனியார் ஊடகத்துக்கு அளித்த சமீபத்திய பேட்டியில் விஜய் மற்றும் திரிஷா குறித்து பேசியுள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், விஜயும் திரிஷாவும் திருமணம் செய்துகொள்ள வேண்டும், நாங்கள் அவர்களின் மெஹந்தி விழாவிற்கு வருகை தருவோம் என்று தெரிவித்தார்.


திரிஷாவை நான் சிறு வயது முதலே அறிவேன். நாங்கள் இருவரும் ஒன்றாக திரையுலகில் போராடிய நாட்கள் உண்டு. அவர் பாலிவுட்டிலிருந்து தென்னிந்திய சினிமாவிற்கு மாறினார். விஜயுடன் அவரது ஜோடி மிகவும் அழகாக இருக்கிறது என்றும் கூறினார்.

விஜயைப் பற்றி பேசிய ராக்கி, நான் தனிப்பட்ட முறையில் விஜயை மிகவும் விரும்புகிறேன். அவர் மிகவும் நல்ல குணம் உடையவர். அவருடன் ஒரு பாட்டு பாட வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது. ஆனால் வாய்ப்பே கிடைக்கவில்லை. இப்போது அவரது கட்சியிலேயே சேர்ந்துவிடலாம் என்று தோன்றுகிறது என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.

Advertisement

Advertisement