• May 15 2026

பையில வெறும் 250 ரூபாய் தான் இருந்தது.. - கண் கலங்கிய விக்னேஷ் சிவன்!

shali / 1 month ago

Advertisement

Listen News!

விக்னேஷ் சிவன் சமீபத்தில் நடைபெற்ற ‘LIK’ திரைப்பட விழாவில் பகிர்ந்த உணர்ச்சி மிகுந்த சம்பவம் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. தனது ஆரம்ப கால போராட்டங்களை நினைவுகூர்ந்த அவர், 'நானும் ரவுடி தான்' படத்தை புதுவையில் படமாக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாக கூறினார். ஆனால் அப்போது தனது பையில் வெறும் ரூ.250 மட்டுமே இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த கடினமான சூழ்நிலையில், அனிருத் அவருக்கு அளித்த உதவி குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார். “விக்கி, உன் பையில் ரூ.50,000 வைத்துள்ளேன்...” என்று அனிருத் அனுப்பிய மெசேஜ் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என்றும், அந்த அன்பால் தான் அழுதுவிட்டேன் என்றும் கூறினார்.

மேலும், அனிருத் ஒரு நல்ல மனம் கொண்ட மனிதர் என்றும், வாழ்க்கை முழுவதும் அவருடன் இருப்பேன் என்றும் விக்னேஷ் சிவன் தெரிவித்தார். இவர்களின் நட்பு மற்றும் பரஸ்பர ஆதரவு ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

Advertisement

Advertisement