• Jun 14 2026

கோர்ட்டில் கேம் சேஞ்சராகும் வீடியோ ஆதாரம்.. பழி ஜனனி மீது விழுமா?

Aathira / 4 days ago

Advertisement

Listen News!

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் இன்றைய எபிசோட்டில், இராவணனின் ஆட்களால் கடத்தப்பட்ட தர்ஷினியை மீட்கும் முயற்சியில் ஜனனி தீவிரமாக களமிறங்குகிறார். அவருக்கு துணையாக மலை கிராமத்தைச் சேர்ந்த அருந்ததியும் இணைகிறார். தர்ஷினியை ஏற்கனவே பார்த்ததாக அருந்ததி கூறியதையடுத்து, விபத்துக்குள்ளான கார் இருந்த இடத்தை நோக்கி இருவரும் புறப்படுகிறார்கள்.

மறுபுறம், ஆதி குணசேகரனும் தனது தரப்பில் ஆட்களை வைத்து தர்ஷினியை தேடி வருகிறார். இதற்கிடையில், வீட்டுக்கு வரும் வக்கீல், வழக்கு விசாரணை முடியும்வரை வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கிறார். இல்லையெனில் சட்ட ரீதியாக பெரிய சிக்கல் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கிறார்.

ஜனனி மற்றும் அருந்ததி இணைந்து தர்ஷினியை கண்டுபிடிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கதை நகர்கிறது. தர்ஷினியை பாதுகாப்பாக மீட்டு, நீதிமன்றத்தில் ஆதி குணசேகரனுக்கு எதிராக சாட்சி சொல்ல வைக்க ஜனனி திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.


இதோடு, ஈஸ்வரியை தாக்கிய ஆதி குணசேகரனின் வீடியோ ஆதாரம் சக்தியின் கைக்கு கிடைத்துள்ளது. அந்த வீடியோ நீதிமன்றத்தில் முக்கிய ஆதாரமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், கடைசி நேரத்தில் இராவணனும் தனது அடுத்த நகர்வை தொடங்கியுள்ளார். காரில் சென்ற ஆதி குணசேகரனை காருக்குள்ளேயே சிக்கவைத்து தீர்த்துக் கட்ட முயற்சிக்கிறார். இதனால் மூச்சுத்திணறி மயங்கும் ஆதி குணசேகரனின் நிலை என்ன ஆகும்? இந்த சம்பவத்தின் பழி ஜனனி மீது சுமத்தப்படுமா?

இந்த அடுக்கடுக்கான திருப்பங்களுக்கு பதில், இனி வரும் எதிர்நீச்சல் எபிசோடுகளில் தெரியவரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement