• May 16 2026

வென்று வா தலைவா! - தளபதி விஜய்க்காக சிபி சத்யராஜ் எழுதிய உருக்கமான கடிதம்..

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் சிபி சத்யராஜ் சமீபத்தில் வெளியிட்டுள்ள கடிதம் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. தனது கடிதத்தில், விஜய் குறித்து தனது அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தியுள்ளார். “கடந்த 33 ஆண்டுகளாக எங்களை மகிழ்வித்து, உற்சாகப்படுத்தி, நேரடியாகவும் மறைமுகமாகவும் உத்வேகம் அளித்ததற்கு நன்றி அண்ணா. 


நீங்கள் திரையில் கொடுத்த அந்த அற்புதமான தருணங்கள் எப்போதும் எங்கள் மனதில் நிறைந்திருக்கும். வென்று வா தலைவா! நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.” என அவர் எழுதியுள்ளார்.

இந்த வார்த்தைகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக விஜயின் அரசியல் பயணத்திற்கு நடிகர்கள் தரப்பிலிருந்து வரும் ஆதரவாக இது பார்க்கப்படுகிறது. தற்போது விஜய் தனது தவெக கட்சியின் மூலம் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சிபிராஜ் போன்ற நடிகர்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பது அரசியல் வட்டாரங்களிலும் கவனம் ஈர்த்துள்ளது.

மேலும், சிபிராஜ் தனது தந்தையான சத்யராஜ் போலவே சமூக மற்றும் அரசியல் விஷயங்களில் தன்னுடைய கருத்துகளை தைரியமாக வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த கடிதம் ரசிகர்களிடையே உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement