• May 18 2025

மீனாவுக்கு வார்னிங் கொடுத்த விஷக் கிருமிகள்.. விஜயாவுக்கு எமனாக என்ட்ரி கொடுத்த பிரபலம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், முத்து கல்யாண நாளை மறந்து போனதை நினைத்து மீனா கோபமாக இருக்க, நம்ம கல்யாணம் முறைப்படி நடக்கல, முறைப்படி நடந்து இருந்தா ஞாபகம் இருக்கும் என சொல்லுகிறார். மேலும் நீ என்னை கூட்டிட்டு போய் கோவில்ல நடந்த கல்யாணம் தான் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு என்று சொல்லுகிறார். இதன்போது முத்துவை முதன் முதலாக பார்த்த சம்பவங்களை பற்றி பேசிக் கொள்கிறார்கள்.

இதையடுத்து, மீனாவின் அம்மா வீட்டுக்கு வந்து கல்யாண நாளுக்காக தன்னால் முடிந்த சீர் கொடுக்க, அவரை விஜயா அசிங்கப்படுத்துகிறார். அத்துடன் ரோகிணி அங்கு நிற்க உங்கட அப்பா ஜெயில்ல இருக்கார் என்று கேள்விப்பட்டேன். எனக்கு தெரிஞ்ச கோவில் ரொம்ப சக்தி வாய்ந்தது. அங்க வேண்டினா கண்டிப்பா நடக்கும். அப்பாவுக்காக கோவிலுக்கு போக சொல்ல, ரோகிணி முகம் மாறுகிறது.


இதை தொடர்ந்து இங்க நடக்கிற எல்லாம் மீனா உங்க வீட்டுல சொல்லுறாளா? ரோகிணிட அப்பாவும் நீங்களும் ஒன்றா? இல்லை ஸ்ருதிட அம்மாவும் நீங்களும் ஒன்றா என்று சொல்லி சரமாரியாக திட்டுகிறார். அதன்பின் மீனா அவரை வீட்டுக்கு போகுமாறு அனுப்பி வைக்கிறார்.

அதன்பின், கிச்சனில் இருக்கும் மீனாவிடம் ரோகிணியும், விஜயாவும் சென்று  திட்டுகிறார்கள். இனி இங்கு நடப்பவற்றை வெளியில் சொல்லக் கூடாது என்று வார்னிங் கொடுக்கிறார்கள்.

இறுதியாக முத்து மீனாவின் கல்யாண நாளை முன்னிட்டு பாட்டி வீட்டுக்கு வருகிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement