• May 19 2025

மீண்டும் இணைந்த வெங்கி அட்லூர் மற்றும் ஜி.வி.பிரகாஷ்...!ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில்...!

Roshika / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர் பல திரைப்பங்களிலும் ஹீரோவாக நடித்தும் உள்ளார். இவரது நடிப்பில் வெளியான "கிங்ஸ்டன்" ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற போதும் வசூல் ரீதியில் சாதனை பேறவில்லை. இந்த திரைப்படத்தினை அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கி உள்ளார். இந்த நிலையில் வெங்கி அட்லூரியுடன் 3வது முறை கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றது.


வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான "வாத்தி மற்றும் லக்கி பாஸ்கர்" திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியில் சாதனையும் படைத்திருந்தது. இந்த இரண்டு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல  வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில்  இரண்டு திரைப்படங்களுக்கும்  ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். 


தற்போது சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள "சூர்யா 46" என்ற திரைப்படத்தில் இசையமைப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Advertisement

Advertisement