• Jul 12 2025

இளையராஜா ஓகே தான் சொன்னார் ...! பாடல் உரிமை குறித்து வனித்தாவின் தெளிவான பதில்!

Roshika / 4 hours ago

Advertisement

Listen News!

நடிகை, இயக்குநர் மற்றும் மக்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய பிரபலம் வனிதா விஜயகுமார் தற்போது தனது இயக்குநர்ப் பயணத்தை MR & MRS படத்தின் மூலம் தொடங்கியுள்ளார். நடிகர் விஜயகுமாரின் மகளாக திரையுலகில் அறிமுகமான வனிதா, கடந்த காலங்களில் பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மீண்டும் ரசிகர்களின் மனதை கைப்பற்றியவர்.


சினிமாவில் தனது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இயக்கியுள்ள MR & MRS திரைப்படம், காதல் மற்றும் ரொமான்ஸ் கலந்து உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் வனிதா கதாநாயகியாக நடித்துள்ளதோடு, பிரபல டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதையடுத்து, நடிகர்கள் ஷகீலா, செஃப் தாமு, ஸ்ரீமன், பவர் ஸ்டார் சீனிவாசன், பாத்திமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படத்தை வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


படம் திரையரங்குகளில் வெளியான பிறகு, இளையராஜா இசையமைத்த புகழ்பெற்ற ‘ராத்திரி சிவராத்திரி’ பாடல் இப்படத்தில் இடம்பெற்றது குறித்து சர்ச்சை எழுந்தது. இதற்கு பதிலளித்த வனிதா, “நான் நேரிலேயே இளையராஜா அவர்களை சந்தித்து, அந்த பாடலைப் பற்றிச் சொன்னேன். அவர் ‘ஓகே’ என்றார். அவர் ஒரு இசைக் கடவுள். அவரை மிஞ்ச முடியாது,” என உருக்கமாக கூறினார்.

அவர் கூறும் போது “நான் நேரிலேயே அவரிடம் சந்தித்து, அந்த பாடலைப் பற்றிச் சொன்னேன். அவர் ‘ஓகே’ என்றார். அவர் ஒரு இசைக் கடவுள். அவரை மிஞ்ச முடியாது,” என உருக்கமாக கூறினார். இருப்பினும், படம் வெளியான பிறகு அனுமதி இல்லாமல் பாடல் பயன்படுத்தப்பட்டதாக ஒரு நோட்டீஸ் வந்ததாகத் தெரிவித்தார். ஆனால், சோனி மியூசிக் அந்த உரிமையை வாங்கியுள்ளது என்றும், சட்டபூர்வமாகவே பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.


இந்த விவகாரத்தால் சிறிய சுழற்சி ஏற்பட்டிருந்தாலும், வனிதா அதனை திறமையாக சமாளித்துள்ளார். தற்போது MR & MRS படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. வனிதாவின் புதிய முயற்சி, அவரது மகள் ஜோவிகாவின் தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கும் முயற்சி, இரண்டும் சமூக ஊடகங்களில் பாராட்டைப் பெற்றுவருகின்றன. சினிமா, இசை மற்றும் குடும்ப பிணைப்புகள் கலந்திருக்கின்ற MR & MRS திரைப்படம், தமிழ் சினிமாவில் வனிதாவுக்கு புதிய அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement