• Apr 26 2025

குக் வித் கோமாளியில் இணையும் எதிர்பாராத புது பிரபலங்கள்! வெளியாகிய நியூ ப்ரோமோ!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

சமீப காலங்களில் மக்கள் டிவி நிகழ்ச்சிகள் , சீரியல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அவ்வாறே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளியின் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி தமிழ்நாடு முழுவதும் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சி குக்வித் கோமாளி ஆகும். சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் வழக்கமான நிகழ்ச்சிகள் போன்று இல்லாமல் சமையல்  செய்ப்பவர்களுடன் கோமாளிகளையும் வைத்து மிகவும் நகைச்சுவையாக நடத்தி சென்றனர். 


இவ்வாறு வெற்றிகரமாக பல சீசன்களை கடந்துள்ள இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் ஆரம்பமாக உள்ளது. இதில் மணிமேகலை நிகழ்ச்சி தொகுப்பாளர் , மாதம்பட்டி ரங்கராஜ் நடுவர் , ராமர் கோமாளி என பல விடயங்களை அறிமுகம் செய்திருந்த நிலையில் இதன் அடுத்த ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர். அதில் புதிதாக பிரபல யூடியூபர்  Ifan , விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா , பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் நடிக்கும் வசந்த் வசி , நடிகர் விடிவி கணேஷ் , சுஜித்தா ஆகியோரை இந்த சீசனுக்குக்கான குக் என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.   

Advertisement

Advertisement