• May 15 2026

'கருப்பு' படத்தில் தளபதி ஸ்டைல கையில் எடுத்த திரிஷா.. அறிமுக காணொளி இதோ..

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா நடிப்பில் RJ பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் வரும் மே 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் சூர்யா 'சரவணன்' என்ற வழக்கறிஞராக நடிக்கிறார். மக்களுக்கு உதவும் அவரை, ஊரே ஒரு தெய்வமாக பார்க்கும் கதைக்களத்தில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கருப்பு படத்தில் திரிஷா கிருஷ்ணன் 'ப்ரீதி' என்ற வழக்கறிஞராக நடித்துள்ளார். அவரது கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் விதத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.


அதில் அவருடைய தோற்றம் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதில் விஜய்யின் ஸ்டைலை காப்பி பண்ணியுள்ளார் திரிஷா.

அதன்படி நான் வாரேன் என கைகளால் செய்கை காட்டும் விஜய்யின் ஸ்டைலை அப்படியே இதில் பிரதிபலித்துள்ளார். இது விஜய் ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த படத்தில் நட்டி நட்ராஜ், மன்சூர் அலிகான், ஸ்வாசிகா, ஷிவதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் உள்ளனர். 

Advertisement

Advertisement