தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு மற்றும் தனித்துவமான இயக்குநர் வெற்றிமாறன் இணையும் புதிய படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. வடசென்னை பின்னணியில் அமைந்த 'கேங்ஸ்டர்' கதையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
முதற்கட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சம்பள விவகாரங்கள் காரணமாக இப்படம் கைவிடப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்தது. மேலும், தயாரிப்பாளருக்கு மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், சிம்பு தரப்பில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சில செய்திகள் வெளியானது.
இந்நிலையில், இந்த வார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது எக்ஸ் தளபக்கத்தில், "தொடங்கியது! மற்றவர்களின் அலறலைத் தாண்டி தொடரும். சிங்கத்தின் ஆட்டம் விரைவில்." என உற்சாகமாக பதிவிட்டுள்ளார்.
Listen News!