• May 22 2025

மலர் ரீச்சருக்கு இன்று பிறந்தநாள் ,தண்டேல் படக்குழு வெளியிட்ட வீடியோ வைரல் !

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

2015 ஆம் ஆண்டு வெளியான  பிரேமம் திரைப்படத்தில் மலர் எனும் கதாபத்திரத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி இரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் சாய் பல்லவி.தொடர்ந்து பாலாஜி மோகன் இயக்கி தனுஷ் நடிப்பில் வெளியான  மாரி 2 படத்தின் மூலமாக தமிழ் இரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பெற்றார்.


இந்நிலையில் சாய்பல்லவி இன்று தனது 32 வது பிறந்தநாளை  கொண்டாடுகிறார்.இவரின் பிறந்தநாளை சிறப்பிக்க திரைத்துறையினரும் இரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது சந்தூ மொண்டேடி இயக்கத்தில் தண்டேல் எனும் திரைப்படத்தில் இவர் நடித்து வருகின்றார்.


இந்நிலையில் தண்டேல் படக்குழுவினர் சாய்பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவிக்கும் முகமாக இன்று ஓர் காணொளியை வெளியிட்டுள்ளனர். குறித்த காணொளியில் தண்டேல் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட  வீடியோக்களை பயன்படுத்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.சாய்பல்லவி படப்பிடிப்பின்போது செய்யும் குறும்புகளை கொண்ட இவ் வீடியோவை இரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

Advertisement