• Aug 29 2025

"டைட்டானிக் காதலும் கவுந்து போகும்" படத்தின் தேதி அறிவித்த படக்குழு.!எப்போது தெரியுமா ?

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

திருக்குமரன் என்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் சிவி வி குமார் தயாரித்துள்ள ‘டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்’ திரைப்படம் இந்த ஜூலை 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை  அறிமுக இயக்குநர் ஜானகிராமன்  இயக்கியுள்ளார். திரைப்படத்தில் கதாநாயகனாக கலையரசன் நடித்துள்ளார். அவருடன் ஆனந்தி, ஹரிகிருஷ்ணன், காளி வெங்கட் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.


இசையை நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்  படத்தின் பாடல்கள் ஏற்கனவே இளைஞர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில்  ‘காதல் கப்பல்’ என்ற பாடல் இசை ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது. ‘டைட்டானிக்’ என்ற தலைப்பு படத்திற்கு ரசிகர்கள் மட்டில் வரவேற்பை பெற்று வருகின்றது. காதல் வாழ்க்கையில் வரும் சவால்கள், எதிர்பாராத சூழ்நிலைகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மனிதர்களின் மனநிலை போன்றவற்றை நக்கலோடு சொல்லும் முயற்சிதான் இந்த திரைப்படம் என்று கூறியுள்ளார். 


இயக்குநர் ஜானகிராமனின் தனித்துவமான காட்சிப்பதிவு மற்றும் கதையாக்கம், கலையரசனின் நுட்பமான நடிப்பு, ஆனந்தியின் மென்மையான பங்களிப்பு என பல அம்சங்கள் இந்த படத்தை சிறப்பிக்கின்றன. ரசிகர்கள்  மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், ‘டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்’ படம் ஜூலை 18ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement