• May 15 2026

ஃபர்ஸ்ட் சிங்கிள் சாங் பார்த்தவர்கள் முட்டாள்கள்.. நான் தான் பலியாடு! கோட் பட நடிகர் திடீர் ஆவேசம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தற்போது பலராலும் எதிர்பார்க்கப்படும் ஒரு படம் என்றால் அது கோட் படம் தான். தளபதி விஜய் நடிக்கும் இந்த திரைப்படம் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகின்றது.

இந்த படத்தில் நடிகர் விஜய், பிரபுதேவா, பிரசாத், அஜ்மல், சினேகா உட்பட பலர் நடிக்கின்றார்கள். இதன் காரணமாகவே இதற்கு எதிர்ப்பார்ப்பு அதிக அளவில் காணப்படுகின்றது.

தற்போது கோட் படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அண்மையில் வெங்கட் பிரபு கூறியிருந்தார். இதன் முதலாவது சிங்கிள் பாடலும் விசில் போடு என்று  யுவன் இசையில் உருவாகி வெளியாகி இருந்தது. 

இந்த நிலையில், தற்போது கோட் படத்தில் நடித்து வரும் அஜ்மல் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,


இந்தப் படம் மிகப்பெரிய ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிஎஸ்கே வீரர்கள் நடித்துள்ளது  குறித்து தற்போது நான் எதையும் தெரிவிக்க முடியாது. இது குறித்து ஏஜிஎஸ் நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என்று கூறியுள்ளார். 

மேலும் இந்த படம் ஃபேமிலி என்டர்டெயினராகவும் ஆக்சன் மற்றும் மாஸ் என்டர்டெய்னராகவும்  உருவாகியுள்ளது. வழமையாக வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் பிரண்ட்ஷிப் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகவே காணப்படும். 

அதிலும் கோட் படத்தில்  நான்தான் பலியாடு போல உள்ளேன். அண்மையில் இந்த படத்தின் சாங் வெளியான போது நிறைய பேர் நெகட்டிவ் பற்றி பேசினார்கள். ஆனால் நான் அதை எதையுமே கண்டு கொள்ளவில்லை. அவர்கள் ஒரு பகுதியை மட்டும் தான் பார்க்கின்றார்கள். அவ்வாறு பார்ப்பவர்கள் முட்டாள்கள். படத்தை முழுசாக பார்த்துவிட்டு பேசுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement