• Apr 17 2026

இந்த வார நாமினேஷனில் வசமாக சிக்கிய ஜோவிகா! மீதமுள்ள 7 போட்டியாளர்களும் யாரென தெரியுமா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாளிலிருந்து காரசாரமாக சென்று கொண்டிருக்கிறது. அதிலும் கடந்த வாரம் அதிரடியாக 2 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்தனர்.

இந்த நிலையில், பிக்  பாஸ் வீட்டில் இந்த வாரம் 8 போட்டியாளர்கள்  நாமினேஷனில் சிக்கி உள்ளனர். அத்துடன், நீண்ட காலமாக நாமினேஷனில் இருந்து தப்பித்து வந்த ஜோவிகாவும் இம்முறை  நாமினேஷன் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும், இம்முறை பிக் பாஸ் வீட்டில் தினேஷ் நேரடியாகவே  நாமினேஷன் செய்யப்பட்டிருந்தார். அவரை தொடர்ந்து  விக்ரம்இ பூர்ணிமா, அனன்யா,  மணி சந்திரா, கூல் சுரேஷ், விசித்ரா மற்றும் ஜோவிகா என மொத்தம் 8 பேர் நாமினேஷனில் உள்ளனர்.


இவ்வாறான நிலையில், இதில் விக்ரமுக்கு 6 ஓட்டுகளும்இ பூர்ணிமாவுக்கு 4 ஓட்டுகளும், அனன்யா, கூல் சுரேஷ், மணி சந்திரா ஆகியோருக்கு தலா 3 ஓட்டுகளும், விசித்ரா மற்றும் ஜோவிகாவுக்கு 2 ஓட்டுகளும் கிடைத்துள்ளன.

எனவே, இவ்வாறு நாமினேஷனில் சிக்கிய இந்த எட்டு பேர்களில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement