• May 16 2026

பகட்டான வாழ்க்கைக்காக பல லட்சங்களை செலவு செய்த சமீரா ரெட்டி.. இப்போதிருக்கும் நிலை இதுதான்

shali / 1 week ago

Advertisement

Listen News!

சமீரா ரெட்டி சமீபத்தில் பகிர்ந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. தனது ஆரம்ப கால அனுபவங்களை நேர்மையாக திறந்த மனதுடன் பேசியுள்ளார்.


அவர் கூறுகையில், “சக நடிகைகள் விமான நிலையத்திற்கு வரும் போது விலையுயர்ந்த பைகள், ஜாக்கெட்டுகள் போன்றவற்றுடன் வருவதை பார்த்து நானும் அதேபோல் இருக்க வேண்டும் என நினைத்தேன். ரூ.1.70 லட்சம், ரூ.2.50 லட்சம், ரூ.4 லட்சம் என அதிக பணம் செலவு செய்து பல பொருட்களை வாங்கினேன். மற்றவர்கள் என்னை மதிக்க வேண்டும் என்பதற்காக இதை செய்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த முடிவுகளை பின்னர் நினைத்த போது வருத்தம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். அதாவது,  “அந்த பணத்தை தங்கத்தில் முதலீடு செய்திருந்தால், இன்று அது நல்ல லாபத்தை கொடுத்திருக்கும். வாழ்க்கையில் முன்னுரிமைகள் என்ன என்பது பின்னர் தான் புரிகிறது.” என்றும் பகிர்ந்துள்ளார்.

அவரது இந்த நேர்மையான கருத்து பலருக்கும் தொடர்புடையதாக இருந்ததால், இது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement