• Apr 27 2025

இது ஈஸியான விஷயம் இல்ல.. கொஞ்சம் யோசிக்கலாமே..! கோபிக்கு கிடைத்த ஏமாற்றம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட், ஈஸ்வரி தனது பையனுக்கு இருப்பதற்கு வீடு இல்லை என பாக்யாவிடம் புலம்பிக் கொண்டிருக்கின்றார். மேலும் கோபியை இப்போதைக்கு வீட்டை விட்டு துரத்தி விடாதே கொஞ்ச நாளைக்கு அவன் இங்கே இருக்கட்டும் என்று சொல்லுகின்றார்.

அதன் பின்பு கோபி கோர்ட்டுக்கு கிளம்பு., ஈஸ்வரி போக வேண்டாம் என்று தடுக்கின்றார். ராதிகா தனியாத்தானே முடிவெடுத்தார். நீ போகவில்லை என்றால் அவங்களாகவே அவருக்கு டிவோஸ் கொடுத்து விடுவார்கள். அதனால் போக வேண்டாம் என்று கோபியை தடுகின்றார்.

ஆனாலும் கோபி இல்லை நான் போகத்தான் வேண்டும்..... ராதிகாவை நான் சந்திக்கவே இல்லை.. சந்தித்து பேச வேண்டும் என கிளம்பி செல்கிறார். இதனால் அந்த மாயக்காரி என் பிள்ளையை என்ன பண்ணி விடுவாளோ என ஈஸ்வரி தனியாக இருந்து புலம்பி கொண்டு இருக்கிறார். இதன்போது பாக்யா தான் ரெஸ்டாரண்டுக்கு செல்வதாக கிளம்பி செல்கின்றார்.


இதைத்தொடர்ந்து நீதிமன்றத்துக்கு சென்ற கோபி அங்கு ராதிகாவை சந்திக்கின்றார். கோபியை பார்த்த ராதிகா அவரை நலம் விசாரிக்கின்றார். மேலும் அவர் எங்கே இருக்கின்றா? மயூவையும் பற்றி கோபி விசாரிக்கின்றார். ஆனாலும் மயூவை பார்க்க நான் இருக்கின்றேன். தான் பெங்களூரில் இருப்பதாக கோபிக்கு அதிர்ச்சி கொடுக்கின்றார் ராதிகா.

இறுதியில் தன்னுடன் கதைத்ததால் ராதிகா மனம் மாறுவார் என தனது வக்கீலிடம் கோபி பேசிக் கொள்ளுகின்றார். ஆனால் அங்கு நீதிபதி முன் தனக்கு இவருடன் வாழ விருப்பமில்லை.. எனக்கு விவாகரத்து வேண்டும் என ராதிகா பேரதிர்ச்சி கொடுக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement