• May 16 2026

ஹோலி பண்டிகையை இப்படியும் கொண்டாடலாம்..! இந்திரஜா வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சினிமா பிரபலங்கள் பலரும் ஹோலி பண்டிகையை கொண்டாடிய நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அதன்படி, விஜய் நடித்த ‘பிகில்’ படத்தில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்த இந்திரஜா ரோபோ சங்கர் ஹோலி பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி உள்ளன.

எனினும், பல பிரபலங்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடிய நிலையில், இந்த முறை ஏஐ எடிட்டிங் மூலமும் ஹோலி பண்டிகையை கொண்டாடி சில பிரபலங்கள் வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, ‘அமராவதி’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சங்கவி தற்போது சின்னத்திரையில் கலக்கி வருகின்றார். அவர் ஹோலியை முன்னிட்டு ஏஐ எடிட்டிங் செய்யப்பட்ட வீடியோ ஒன்றை ஷேர் செய்திருந்தார்.


அதேபோல், சமீபத்தில் மறைந்த ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா ஹோலி கொண்டாடியது போல உருவாக்கப்பட்ட ஏஐ புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். 

பார்ப்பதற்கு மிகவும் கலர்ஃபுல்லான காட்சிகளுடன் காணப்பட்ட அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “இப்படியும் ஹோலி கொண்டாட ஆரம்பித்து விட்டீர்களா?” என தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement