• May 17 2025

என் மகளை கழற்ற சொன்னார்கள் நீட்தேர்வு எழுதாமல் வந்துவிட்டால்! இயக்குனர் அமீர் உருக்கம்!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியாவில் நடைபெறும் நீட் தேர்வு என்பது மிகவும் சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உரிய ஒன்றாகவே காணப்படுகின்றது. குறித்த நீட் தேர்வின் போது இயக்குனர் அமீர் அவர்களின் மகளுக்கு நடந்த சம்பவத்தை உருக்கமாக பகிர்ந்துள்ளார்.


பருத்திவீரன் , மௌனம் பேசியதே ஆகிய திரைப்படத்தை இயக்கிய முன்னணி இயக்குனர் அமீர் ஆவார். இவர் தொடர்ந்து நடிகராகவும் பல படங்களில் நடித்திருந்தாலும் வட சென்னை திரைப்படத்தில் இவர் நடித்த ராஜன் கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.


இந்த நிலையிலேயே தனது  மகளுக்கு நீட் தேர்வின்போது நடந்த சில விடயத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில் " எனது மகள் 2 ஆண்டுகளுக்கு முன் நீட் தேர்வு எழுத சென்றபோது, புர்காவை கழற்ற கூறியதால் தேர்வு எழுதாமல் வீட்டிற்கே வந்துவிட்டார் நீட் தேர்வு அமெரிக்க நிறுவனம் மூலம் நடத்தப்படுகிறது; பயிற்சி மையமும் தனியார் நிறுவனமே நடத்துகிறது; போலி மருத்துவர்களை தான் நீட் உருவாக்குகிறது" என கூறியுள்ளார்.


Advertisement

Advertisement