• May 16 2026

மூஞ்ச பார்த்து முறைக்கிறாங்க.. அப்படியா பழகினோம்..? கனி செய்த காரியம்..

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் 100 நாட்களை எட்டியுள்ளது.  தற்போது இந்த சீசனில்  பிக் பாஸ் டைட்டிலுக்கான போட்டியில்  சபரி, திவ்யா, விக்ரம் மற்றும் அரோரா ஆகியோர் காணப்படுகின்றனர். 

இந்த நிலையில், இன்றைய தினம் வெளியான முதலாவது ப்ரோமோவில்  பிக் பாஸ் வீட்டிற்கு கனி, சுபிக்ஷா, ஆதிரை மற்றும் FJ ஆகியோர் என்ட்ரி கொடுக்கின்றார்கள். இவர்களைப் பார்த்ததும் சக போட்டியாளர்கள் கட்டி அணைத்து  தங்களுடைய அன்பை பொழிந்தனர். 

கனி வந்ததும் விக்ரமை பார்த்து எப்படி இருக்கீங்க என்று   கையை கொடுக்கின்றார்.  ஆனால் அதற்கு பின்பு சபரியுடன் விக்ரம் பேசும்போது, கனி வந்ததும்  மூஞ்ச பாத்து கைய கொடுக்குறாங்க..  அப்படியா பழகினோம்..? 

வந்ததிலிருந்து கனியும் முறைக்கிறாங்க.. சுபிக்ஷாவும் முறைக்கிறாங்க..  என்று சபரியிடம் விக்ரம் புலம்புகின்றார். 


 ஆனால் அதற்குப் பிறகு கனியிடம் சென்று என் மேல கோவமா என்று கேட்க,  இல்லை என்று கனி சொல்லுகின்றார்.  இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.

எனினும் இதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் இது பிராங்க் என உறுதியாக தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் கனி அன்பை மட்டும் தான் காட்டுவார்  என்றும் சுட்டிக்காட்டி உள்ளனர். 


Advertisement

Advertisement