• May 16 2026

ரொம்ப நாளாவே ப்ளாக் மெயில் பண்ணுறாங்க.! திருநங்கை வைஷு வெளியிட்ட அதிர்ச்சி காணொளி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் நாஞ்சில் விஜயன் மற்றும் திருநங்கை வைஷு இடையேயான பிரச்சனை சமீப காலமாகவே தொடர்ந்து வருகிறது.  நாஞ்சில் விஜயன், தன்னை காதலித்து ஏமாற்றியதுடன் பணம் வாங்கியதாகவும் வைஷு குற்றம்சாட்டி புகார் அளித்திருந்தார். பின்னர் அந்த புகார் வாபஸ் பெறப்பட்டது.

மேலும், வைஷு பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து நாஞ்சில் விஜயன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதையடுத்து, நாஞ்சில் விஜயன் மற்றும் அவரது மனைவி இணைந்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய நாஞ்சில் விஜயன், “என்னை பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் வெளியிடட்டும். தேவையில்லாமல் என்னையும் என் குடும்பத்தையும் பற்றி தவறாக பேசப்படுகிறது,” எனக் கூறி உணர்ச்சி வசப்பட்டார். அதன்பின் சில காலம் இந்த பிரச்சினை அமைதியாக காணப்பட்டது.


இந்த நிலையில், திருநங்கை வைஷு தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அதில் அவர் நாஞ்சில் விஜயனை என் துன்புறுத்துகிறீர்கள் என பலரும் தன்னை மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், நேற்று ஒருவர் வேண்டும் என்றே தன்னை தாக்கி விட்டு சென்றுள்ளதாக அழுது புலம்பி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அவருடைய காணொளி இணைய தளங்களில் வைரலாகி வருகிறது... 

Advertisement

Advertisement