விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரமாண்ட நிகழ்ச்சிகளில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீசன் குறித்த ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
மேலும் இந்த சீசனில் தாமு ,மாதம்பட்டி ரங்கராஜ் இருவருடனும் இணைந்து புதிதாக நடுவராக கௌஷிக் இணைந்துள்ளார். மேலும் கடந்த வார ப்ரோமோக்களில் சௌந்தர்யா கலந்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.இவருடன் இணைந்து பூவையாறு மற்றும் இன்னும் இரண்டு புது கோமாளிகள் நிகழ்ச்சியை நகைச்சுவையாக்க காத்திருக்கின்றனர். மேலும் இவர்களுடன் சுனிதா ,புகழ் ,ராமர் ஆகிய பழைய கோமாளிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.
மே 4 ஆம் திகதி பரபரப்பாக ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த சீசனின் போட்டியாளர் குறித்து ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது லக்சுமி ராமகிருஷ்ணன் ,ஷாபனா ஷாயகன் ,ப்ரியா ராமன் ,உமைர் லடேப் ஆகியோருடன் இன்னும் ஒரு சிலர் கலந்து கொள்ளவுள்ளதாக குறித்த ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.
Listen News!