• Jun 13 2025

ரேஸிங் போட்டியை முடிச்சிட்டு... ஸ்கிரீனுக்கு திரும்பிய அஜித்.! ஜோடி சேர்ந்த இளம் நடிகை..!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் என்றால் அது நடிகர் அஜித் குமார் தான். எப்போதும் வேறுபட்ட கதைகள், அழுத்தமான பாணியில் தனது திரைப்பயணத்தில் சிறந்து விளங்கினார். சமீபத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி (Good Bad Ugly)’ திரைப்படம் ரசிகர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றது. பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் படம், 2025-ம் ஆண்டின் முதல்நிலையில் வந்த ஹிட் படம் என்றும் சொல்லப்பட்டது.


இந்த வெற்றிக்குப் பிறகு, ரசிகர்களிடையே அஜித்தின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதற்குப் பதிலளிப்பது போல, தற்போது அஜித் தனது 64வது படத்தை (AK64) இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்துள்ளார் என்ற தகவல்கள் உறுதியாகி வருகின்றது.

இந்த படம் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் மிகுந்த முன்னேற்பாடுகளுடன் உருவாகவுள்ளது. த்ரில்லர்-ஆக்ஷன் பாணியில் அமைந்த கதையாக இந்தப் படம் இருக்கலாம் என்றும், இதற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.


இந்தப் படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க இருப்பது ஸ்ரீநிதி ஷெட்டி என தற்போது கோலிவூட் வட்டாரங்களில் உறுதி செய்யப்பட்ட அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ஸ்ரீநிதி ஷெட்டி, உலகம் முழுவதும் பாராட்டப்பட்ட ‘KGF’ படத்தின் ஹீரோயினாக அறிமுகமானவர். அந்த படத்தில் யாஷ் உடன் நடித்திருந்தார். இதனால் அவருக்கு ஹிந்தி மற்றும் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

AK64 குறித்து தற்போது வெளியான தகவல்கள் ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. “அஜித் மீண்டும் ஒரு மாஸ் படம் தரப்போகிறாரா?” என்ற கேள்வி சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது. இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்றாலும், சில நம்பத்தகுந்த ஊடகங்கள் இதை உறுதிப்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டுள்ளன.


Advertisement

Advertisement