• Apr 17 2026

சுபிக்ஷா பற்றி அமித் உடைத்த உண்மை..? பிக் பாஸ் எலிமினேஷனுக்கு பின் கொடுத்த முதல் பேட்டி

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

2010 ஆம் ஆண்டு  கன்னடத்தில் வெளியான சீதே தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்தான் அமித் பார்கவ். அதற்குப் பிறகு  விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம்  முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். 

இந்த சீரியலின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. அதன் பின்பு நெஞ்சம் மறப்பதில்லை, மாப்பிள்ளை போன்ற சீரியல்களிலும் நடித்தார். இறுதியாக ஜீ தமிழில் ஒளிபரப்பான திருமதி  ஹிட்லர் என்ற சீரியலிலும் நடித்திருந்தார். 

அமித் பார்கவ்க்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தன. அதன்படி மிருதன், சக்ரா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். தமிழில் மட்டும் இல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகின்றார்.  இவர் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் காணப்படுகின்றார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில்  வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்ற அமித், ஆரம்பத்தில்  விறுவிறுப்பாக தனது ஆட்டத்தில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் ஆள் அடையாளமே இல்லாமல்  காணப்பட்டார்.  அவருடைய மனைவி  உள்ளே சென்றபோது அவருக்கு பல அட்வைஸ்களைச் கூறி சென்றார். ஆனாலும் அவர் மாறவில்லை. அதன் பின்பு எலிமினேட் ஆகி வெளியேறினார். 

இந்த நிலையில், அமித் பார்கவ் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறுகையில், நான் பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு இவ்வளவு ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.  

ஒருநாள் காய்கறி வாங்க சென்ற போது கூட ஒரு முதியவர் எனது கைகளை பிடித்து,  நான் உள்ளே விளையாடிய விதம் பற்றியும் என்னுடைய நேர்மை பற்றியும் உருக்கமாக பேசியிருந்தார். இது எனக்கு ரொம்பவுமே மகிழ்ச்சியாக இருந்தது.

பிக் பாஸ் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி எல்லோரும் கேட்ட கேள்வி, எப்படி உங்களால் இவ்வளவு அமைதியாக இருக்க முடியுது என்பதுதான்.  என்னுடைய இயல்பே இதுதான்.  பிக் பாஸில் இருந்து வெளியேறியதும் வீட்டிற்கு வந்து பிரியாணி சாப்பிட்டு  என்ஜாய் பண்ணினோம்.

மேலும் நான் அந்த வாரம் வெளியேறவில்லை என்றால் எனக்கு பதிலாக சுபிக்ஷா வெளியேறி இருப்பார்.  அவர் ஆரம்பத்தில் கடுமையான போட்டியாளராக இருந்த போதும்  ஒரு சில நேரங்களில்  அவர் எதிலும் பங்கு கொள்ளவில்லை என்று எனக்குத் தோன்றியது.  

இறுதி வாரங்களில் அவருடைய பங்களிப்பு குறைவாகவே காணப்பட்டது. இதனால் நான் அந்த வாரம் எலிமினேட் ஆகவில்லை என்றால் கட்டாயம்  சுபிக்ஷா தான் எலிமினேட் ஆகி வெளியேறியிருப்பார் என்று தெரிவித்துள்ளார் அமித் பார்கவ்.




 

Advertisement

Advertisement