• Aug 30 2025

சீதாவிடம் ஸ்ருதி சொன்ன சீக்ரெட்.. சத்யா போட்ட கடும் கண்டிஷன்! மீனா எடுக்கப்போகும் முடிவு?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட்டில், முத்து சத்யாவிடம் உன்ன கஷ்டப்பட்டு படிக்க வச்சா நீ சிட்டி கூட சேர்ந்து சுத்துறியா? என பேசுகிறார். மேலும் சிட்டி கூட இருந்து அவனலையே பிரச்சினைல சிக்க போறா என சொல்லுகிறார். அதற்கு சத்யா உங்க அட்வைஸ் எனக்கு தேவை இல்லை என சொல்லுகிறார்.

அதன் பின் ஸ்ருதி சீதாவை பார்த்து அவருக்கு வாட்ச் கிப்ட் கொடுக்கிறார். மேலும் தான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ள போகிறேன் எனவும், இதனை யாரிடமும் சொல்ல வேண்டாம். முக்கியமாக மீனாவிடம் சொல்ல வேண்டாம் என சொல்லுகிறார்.

மறுபக்கம் சத்யாவிடம் அம்மா கையைப்பற்றி விசாரித்து கொண்டிருக்க, கை எல்லாம் நல்லா ஆயிடுச்சு என்று சொல்ல, நல்லா ஆனா சாமிக்கு கூழ் ஊத்துவதாக வேண்டிக்கிட்டு இருக்கேன் என்று கோவிலுக்கு கூப்பிட முதலில் வர மறுக்கும் சத்யா பிறகு சம்மதிக்கிறார்.


மேலும் முத்து, மீனாவை கூப்பிட சொல்ல. மாமாவை கூப்பிட வேண்டாம் அக்காவை மட்டும் கூப்பிடு என சொல்கிறார். அந்த நேரம் பார்த்து மீனா வருகிறார். நடந்த விஷயத்தை மீனாவிடம் சொல்ல மீனா கோபப்படுகிறார். மீனா அவ்வளவு சொல்லியும் அவர் வரக்கூடாது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார் சத்யா.

இந்த விஷயத்தை முத்துவிடம் சொல்ல, அவரும் போக வேண்டாம் என தடுக்கிறார். இதனால் யோசித்துக் கொண்டிருக்கும் மீனா என்ன முடிவு எடுக்கப் போகிறார்? முத்துவின் வார்த்தையை மீறுவாரா? என பார்ப்போம்.



Advertisement

Advertisement