• Jun 14 2026

"ரிசல்ட்டு பக்கா மனதே." இரவோடு இரவாக திருப்பதிக்கு விசிட் அடித்த திரிஷா.. இதுதான் காரணமா.?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகை திரிஷா தனது 43வது பிறந்தநாளான இன்று அதிகாலையிலேயே திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சுப்ரபாத சேவையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோயில் வளாகத்தில் திரிஷா நடந்து சென்றபோது ரசிகர் ஒருவர் "மேடம், ரிசல்ட்டு பக்கா மனதே" என்று கேட்க, பதிலுக்கு புன்னகையுடன் நடந்து சென்ற திரிஷாவின் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற இருக்கும் நிலையில் திரிஷாவின் திருப்பதி விசிட் பேசுபொருளாகியுள்ளது. 


பிறந்தநாள் விஷேட பிரார்த்தனையாக சென்றாரா, அல்லது விஜயின் தவிக கட்சி வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்திக்கவா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

விஜயின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்யவே திருப்பதி சென்றிருப்பார் என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இரவோடு இரவாக காரில் திருப்பதிக்கு கிளம்பிய திரிஷாவின் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. பிறந்தநாள் கொண்டாட்டத்தை விட சாமி தரிசனத்தையே முன்னுரிமை கொடுத்த திரிஷாவின் இந்த செயல் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.

Advertisement

Advertisement