• Apr 23 2026

'டொமினிக்' படத்தின் ரிலீஸ் தேதி அதிகார்வபூர்வமாக அறிவிப்பு.!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக காணப்படும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் காதல் படங்கள் மட்டுமில்லாமல்  ஆக்சன் திரில்லர் படங்களும் வெளியாகி உள்ளன.  இவருடைய படங்களுக்கு என்றே தனி எதிர்பார்ப்பு காணப்படும்.

இதைத்தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளை முன்னணியாக கொண்டு 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் ' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில்  மலையாள நடிகரான மம்மூட்டி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.


குறித்த படத்தில் மம்மூட்டியுடன் சுஷ்மிதா பட், கோகுல் சுரேஷ், விஜி வெங்கடேஷ், வினித், விஜய் பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து  உள்ளதாக தகவல்களும் வெளியாக இருந்தன.

இந்த நிலையில், 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் ' படத்தின் ரிலீஸ் தேதியை அதிகார்வ பூர்வமாகவே அறிவித்துள்ளனர்  படக்குழுவினர்.

அதன்படி இந்த படம் எதிர்வரும் 23ஆம் தேதி உலக அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement