தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக சிவகார்த்திகேயன் காணப்படுகின்றார். அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு இவருடைய மார்க்கெட் உயர்ந்துள்ளது. தற்போது இவருடைய நடிப்பில் பராசக்தி படம் ரிலீஸ் ஆக உள்ளது.
கடந்த சில தினங்களாக பராசக்தி ஜனவரி 9 அல்லது 10-ம் தேதி வெளியிடப்படும் என கூறப்பட்டது. மேலும் சிவகார்த்திகேயன் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள ஜனநாயகன் படத்துடன் நேரடியாக மோத விரும்பியதாகவும் தகவல்கள் பரவி வந்தன.
அத்துடன் தன்னுடைய பராசக்தி படத்தை விஜயின் ஜனநாயகன் படம் வெளியாகும் அதே தினத்தில் வெளியிட வேண்டும் என்று சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர்களை வற்புறுத்தியதாகவும் பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பராசக்தி படம் தொடர்பிலும் சிவகார்த்திகேயன் தொடர்பிலும் வெளியான வதந்திகளுக்கு படக் குழுவினர் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அதன்படி பராசக்தி திரைப்படம் எதிர்வரும் ஜனவரி 14-ஆம் தேதி தான் ரிலீஸ் ஆகும் எனவும், அந்த தேதியில் எந்த மாற்றமும் இல்லை எனவும் படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.
மேலும் பராசக்தி படத்திலிருந்து வெளியான மூன்றாவது சிங்கில் பாடல் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றது. இன்னொரு பக்கம் பராசக்தி படத்தில் இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
Listen News!