• May 16 2026

விஜய் டிவியில் ஒளிபரப்பான புது சீரியல்.. இளசுகள் ரெண்டும் ஒட்டிக்கிச்சா..!! சர்ப்ரைஸ் போட்டோஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் சிறகடிக்க ஆசை சீரியல், பாக்கியலட்சுமி ஆகியவை மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகின்றன.

இதை தொடர்ந்து கடந்த மாதம் புதிதாக ஒளிபரப்பான சீரியல்  தான் வீட்டுக்கு வீடு வாசப்படி. இந்த சீரியலில் திரவியம் ஹீரோவாக நடிக்கின்றார். இவர் இதற்கு முன்னர் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியலில் இரண்டு பாகங்களிலும் நாயகனாக நடித்துள்ளார். அந்த தொடர் முடிவுக்கு வந்ததை அடுத்து தற்போது வீட்டுக்கு வீடு வாசல் படி என்ற சீரியலில் நடித்து வருகின்றார்.

இந்த சீரியல் இந்தியில் ஒளிபரப்பாகி ஹிட்டான  கஹானி கர் கர் கி  என்கின்ற தொடரின் ரீமேக் ஆகும். அண்மையில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் விஜய் டிவியில் நிறைவடைந்ததை அடுத்து அதற்கு பதிலாக இந்த சீரியல் அதே டைமில் ஒளிபரப்பாகி வருகின்றது.


இந்த சீரியலில் 3 சகோதரர்களை பற்றிய குடும்பத்தின் கதைதான் மையமாக காணப்படுகின்றது. தற்போது இந்த சீரியலுக்கு படிப்படியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.


இந்த நிலையில், இந்த சீரியலில் சுரேஷுக்கு ஜோடியாக நடிக்கும் ஆர்த்தி சுபாஷ் இவர்கள் இருவரும் தற்போது ஹல்தி கொண்டாட்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்கள். இதைப் பார்த்த ரசிகர்கள் உண்மையிலேயே இவர்கள் ரியல் ஜோடியாக மாறிவிட்டார்களா என்று கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

எனினும் உண்மையில் அவர்கள் இருவரும் சீரியலில் தான் திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள். தற்போது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement