• May 14 2026

29படம் வெளியாவதற்கு முன் ஹிட் என்று பேசப்பட்டது.. ஆனால் வெளியான பின் இப்படி நடந்திருச்சே

shali / 3 days ago

Advertisement

Listen News!

ரத்னகுமார் இயக்கத்தில் விது, ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘29’ திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பாக்ஸ் ஆபிஸில் முன்னேற்றம் காணாமல் வசூல் ரீதியாக பெரிய பின்னடவை சந்தித்துள்ளது. 

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படம் வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் வெளியான பின் கிடைத்த வரவேற்பு அதற்கு மாறாக அமைந்துள்ளது.


முதல் நாளில் படம் சுமார் 30 லட்சம் ரூபாய் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் சிறிய அளவிலான ஆர்வம் இருந்தாலும், வார இறுதி நாட்களில் கூட பெரிய உயர்வை காணவில்லை. சனிக்கிழமை வசூல் சற்று உயர்ந்து 40 லட்சம் ரூபாயாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை அது கொஞ்சம் அதிகரித்து 44 லட்சம் ரூபாய் மட்டுமே பதிவானது.

மொத்தமாக மூன்று நாட்களில் ‘29’ திரைப்படம் சுமார் 1.14 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது. பெரிய தயாரிப்பு பெயர்கள், நடிகர் பட்டியல் மற்றும் எதிர்பார்ப்பு இருந்தபோதும், படம் வணிக ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement