• Apr 17 2026

விஜயை முதல் முறை பார்த்த தருணம்.. வேறலெவலில இருந்திச்சு.! மாளவிகா ஓபன் அப்

shali / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய் உடன் நடித்த அனுபவத்தை பற்றி நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் பகிர்ந்த கருத்துகள் ரசிகர்களிடையே பேசுபொருளாகி வருகின்றன. 2021 ஆம் ஆண்டு ஜனவரி 13 அன்று வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த மாளவிகா, தனது பயண அனுபவத்தை நினைவுகூர்ந்துள்ளார்.


மாளவிகா தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்திய போது, விஜயை முதன்முறையாக சந்தித்த தருணமே அவருக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

அதாவது, " நடிகர் விஜயை முதல் முறை பார்த்த போது அது ஒரு கனவு போல இருந்தது. ஆனால் அவர் என்னோட ரொம்ப எளிமையாகவும் அன்பாகவும் நடந்து கொள்வார்." எனக் கூறியுள்ளார் மாளவிகா. 


இதன் மூலம், விஜயின் அமைதியான தன்மையும், அனைவரிடத்திலும் காட்டும் மரியாதையும், செட்டில் இருந்த ஒவ்வொருவரையும் கவர்ந்துவிடும் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல், அனைவரையும் ஊக்குவிக்கும் தன்மை விஜய்க்கு இருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார். 

Advertisement

Advertisement