• Apr 17 2026

மௌனம் பேசிய காதல் மீண்டும் திரையில்.. சூர்யா ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின்  காதல் திரைப்படங்களுக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய நடிகர்களுள் சூர்யா நடிப்பில் வெளியான 'மௌனம் பேசியதே' திரைப்படமும்  ரசிகர்கள் மத்தியில் இன்றும் நீங்கா இடம் பெற்றுள்ளது. 

கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் காலத்தை கடந்த காதல் கதையாக  இன்றும்  பேசப்பட்டு வருகிறது.  அமீர் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருந்தார். 

இந்த படத்திற்கு இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா பணியாற்றி இருந்தார். அவருடைய மென்மையான இசை, படத்தில் உணர்வுகளை இன்னும் ஆழமாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.


மௌனத்தின் மொழியில் காதலை சொல்லியே இந்த திரைப்படம் வெளியான காலத்தில் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யாவின் சினிமா பயணத்தில்  முக்கிய  திருப்பு முனையாகவும் அமைந்தது. 

இந்த நிலையில் 'மௌனம் பேசியதே' திரைப்படம் கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலிஸ் ஆக உள்ளது. அதன்படி  எதிர்வரும் 13 ஆம் தேதி மௌனம் பேசியதே திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

Advertisement

Advertisement