• May 22 2025

பிசாசுகள் வரிசையில் ஹிப் ஹாப் ஆதியின் குட்டி பிசாசு! வெளியானது பீ.டி சாரின் பாடல்

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பாடல் வரிகளில் பிசாசுகள் இணைவது இரசிகர் மனங்களை வென்றதாகவே இருக்கின்றன.உதாரணமாக சிலம்பரசனின்  காளை படத்தில் இடம்பெற்ற  குட்டி பிசாசே பாடல் இன்றும் ரசிகர்களால் விரும்பப்படுகிறது.இந்த வரிசையில் ஹிப் ஹாப் ஆதியின் பாடலும் இணைந்துள்ளது.


இவர் சுந்தர்.c  இயக்கி விஷால் நடித்த ஆம்பள திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்கு இசையமைப்பாளராக அறிமுகமாகியவர் ஆதி ஆவார்.தொடர்ந்து மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகிய  இவர் நட்பே துணை,நான் சிரித்தால் போன்ற படங்களிலிலும் ஹீரோவாக நடித்துள்ளார்.இந்த நிலையில் இவர் நடித்துவரும் அடுத்த படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது.


கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி  நடிக்கும் திரைப்படம் பீ.டி சார்.குறித்த திரைப்படத்தின் குட்டி பிசாசே என்ற பாடல் தற்சமயம் வெளியாகி சமூக வலைத்தளங்களின் வைரலாகி வருகின்றது. இந்த பாடலினை அவரே எழுதி , அவரே இசையமைத்து ,அவரே பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement