• May 18 2026

கார்த்திக் சுப்புராஜின் 10வது படத்தில் இணையும் ஜாம்பவான்! ரசிகர்களை குஷிப்படுத்திய அப்டேட்

shali / 1 hour ago

Advertisement

Listen News!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கிய முக்கிய இயக்குநர்களில் ஒருவராக திகழ்கிறார். ‘ஜிகர்தண்டா’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற அவர், தொடர்ந்து ‘இறைவி’, ‘மெர்குரி’, ‘பேட்ட’, ‘ஜகமே தந்திரம்’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கி தனது திறமையை நிரூபித்துள்ளார். 

வித்தியாசமான கதைக்களம், தனித்துவமான மேக்கிங் மற்றும் ரசிகர்களை கவரும் திரைக்கதை என்பவை அவரது படங்களின் முக்கிய பலமாக இருந்து வருகிறது.


இயக்குநராக மட்டுமின்றி, புதிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் தயாரிப்பாளராகவும் கார்த்திக் சுப்பராஜ் கவனம் பெற்று வருகிறார். இந்நிலையில், தற்போது அவர் இயக்கும் 10-வது திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த புதிய படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சமாக, முதல் முறையாக இசைஞானி இளையராஜா உடன் கார்த்திக் சுப்பராஜ் கைகோர்த்திருப்பது பார்க்கப்படுகிறது.

இப்படம் இளையராஜாவின் 1540-வது திரைப்படமாகும் என்பது கூடுதல் சிறப்பாகும். இதற்கான அறிவிப்பு வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement