இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, தற்போது “டிமான்ட்டி காலனி 3” படமும் தயாராகி வருகிறது. இந்தப் படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் அருள்நிதி மற்றும் பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

கோடைக்காலத்தை முன்னிட்டு அடுத்த மாதம் படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இரண்டு பாகங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், மூன்றாம் பாகத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
Listen News!