கடந்த 2023 ஆம் ஆண்டு நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் பிளாக் பாஸ்டர் வெற்றி பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகின்றது.
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. நெல்சன் திலிப் குமார் இயக்கும் இந்த படத்தில் ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் கேமியா ரோலில் நடித்து வருகின்றனர். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், ஜெயிலர் 2 படத்தின் இரண்டாவது பாகம் தொடர்பில் கன்னட சூப்பர் ஸ்டார் ஆன சிவராஜ்குமார் தெரிவித்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜெயிலர் படத்தில் ரஜினியின் நண்பராக ஒரு சிறிய கேமியோ ரோலில் நடித்தவர் சிவராஜ்குமார். அவர் ஒரு சின்ன காட்சியில் மட்டுமே வந்தாலும் வெறும் டிஷ்யூ பேப்பரை வைத்து கிளைமேக்ஸ் காட்சியில் மிரட்டி இருப்பார்.

அதன்படி அவர் ஜெயிலர் 2 படம் பற்றி பேசுகையில், `ஜெயிலர் 2 படத்திற்காக ஒரு நாள் படப்பிடிப்பை முடித்துவிட்டேன், நாளை மீண்டும் படப்பிடிப்பு உள்ளது. ஜனவரி மாதத்தில் 3 நாட்கள் படப்பிடிப்பு உள்ளது.
இது கிட்டத்தட்ட ஜெயிலர் படத்தின் தொடர்ச்சிபோல இருக்கும். முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது இதில் எனது கேமியோ கதாபாத்திரம் சற்று நீளமாக இருக்கும். இரு திரையுலகங்களுக்கும் இடையே நட்பை வலுப்படுத்தும் விதமாக இந்த கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Listen News!