• Jun 14 2026

அவார்டு மேடையில் ரோகிணிக்கு நேர்ந்த அவமானம்.? சத்யாவுக்கு எதிராக அரங்கேறும் பெரிய சதி

Aathira / 5 days ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் விஜயாவும் மனோஜும் அவார்டு நிகழ்ச்சிக்கு செல்கின்றனர். அங்கு "தாயா? தாரமா?" என்ற விவாதம் நடைபெறுகிறது. இதன்போது விஜயா, தனது மகன் மனோஜைப் பற்றி பெருமையாக பேசுகிறார்.

அதேபோல், மனோஜும் விஜயாவைப் பற்றி பெருமையாக பேசுகிறார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரோகினிக்கு கோபம் வருகிறது. "நான் தான் உன்னை தொழிலதிபராக ஆக்கினேன், ஆனால் நீ உன்னுடைய அம்மாவைப் பற்றிதான் பேசுகிறாயா?" என்று மனோஜை திட்டிக்கொள்கிறார்.

இறுதியில், ரோகினியை சந்திக்கும் விஜயா, "என்னதான் இருந்தாலும் தாய்க்குப் பிறகுதான் தாரம். உனக்கு வேறு வேலையே இல்லையா? என் மகனை விட்டு விலகி இரு" என்று கடுமையாக திட்டிவிட்டு செல்கிறார். இதனால் மனோஜ் ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கிறார்.


இன்னொரு பக்கம், சத்யா விஷயத்தில் நடந்தவற்றை மீனாவிடம் கூறுகிறார் முத்து. இதைக் கேட்டு பதற்றமடைந்த மீனா, "எதற்காக இப்படி செய்தீர்கள்?" என்று முத்துவை திட்டுகிறார். ஆனாலும், "எல்லாம் சரியாகிவிடும்" என்று முத்து அவருக்கு ஆறுதல் கூறிச் செல்கிறார்.

இறுதியில், சிந்தாமணியும் அவரது கணவரும் இணைந்து ரேகாவின் வாழ்க்கை பற்றி பேசுகின்றனர். அதன்படி, சிந்தாமணி ரேகாவுக்கு போன் செய்து இங்கு வரவழைக்குமாறும், அவள் வந்த பிறகு வீட்டிற்குள் வைத்து ஹவுஸ் அரெஸ்ட் செய்யுமாறும் திட்டமிடுகிறார்.

மேலும், ரேகா வீட்டிற்கு வந்த பிறகு, சத்யா அவரை கடத்திவிட்டதாக போலீசில் புகார் அளிக்கவும் சிந்தாமணி யோசனை கூறுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement