• Apr 16 2026

'வீடே லேடீஸ் ஹாஸ்டல் போல இருக்கு' சர்ச்சைக்கு முடிவு? சிரஞ்சீவி ஆசை நிறைவேறியது.!

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் ராம்சரண், அப்பல்லோ மருத்துவமனை நிறுவனரின் பேத்தி உபாசனாவை 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு உடனடியாக குழந்தை பெறாமல், முதலில் திருமண வாழ்க்கையை வாழ வேண்டும் என இருவரும் முடிவு செய்தனர்.

அதன்படி, உபாசனா தனது கருமுட்டைகளை உறையவைத்திருந்ததும் அப்போது பரவலாக பேசப்பட்டது. அதன் பின்னர் 2023 ம் ஆண்டு முதல் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ‘க்ளின் காரா’ என்ற பெயர் சூட்டப்பட்டு, மெகா குடும்பம் முழுவதும் வைபவமாக கொண்டாடியது.

எனினும், மெகா ஸ்டாரான சிரஞ்சீவி, தனது மகன் ராம்சரணுக்கு முதலில் பெண் குழந்தை பிறந்த போது, 'வீடே ஒரு லேடீஸ் ஹாஸ்டல் போல இருக்கு' என நகைச்சுவையாக பேசியிருந்த கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்தது.  அந்த பேச்சு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி , நீண்ட நாட்களாக விவாதமாகவே இருந்து வந்தது.


இந்நிலையில், ராம்சரண் – உபாசனா தம்பதியினருக்கு ட்வின்ஸ் குழந்தைகள் பிறந்துள்ளதுடன், அதில் ஒரு ஆண் குழந்தையும் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மெகா குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகியுள்ளது.

மேலும், சிரஞ்சீவி நீண்ட காலமாக மனதிற்குள் வைத்திருந்த ஆசை தற்போது நிறைவேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தற்போது ராம்சரண் – உபாசனா தம்பதியினருக்கும், புதிதாக பிறந்த ட்வின்ஸ் குழந்தைகளுக்கும் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.




Advertisement

Advertisement