• May 16 2026

'கர' படத்தின் முதல் பாடல் வீடியோ எப்படி இருக்கு?. ரசிகர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் தனுஷ், நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் பாடகராகவும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அவரின் நடிப்பில் சமீபத்தில் இட்லி கடை திரைப்படம் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள “கர” திரைப்படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகியுள்ளது. இது தனுஷின் 54ஆவது திரைப்படமாகும். இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். அவர் ஏற்கனவே 'போர் தொழில்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.


“கர” திரைப்படத்தில் மமிதா பைஜு, கே. எஸ். ரவிக்குமார், கருணாஸ் மற்றும் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்றியுள்ளார்.

தற்போது இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement