• Jul 09 2025

கலைமாமணி விருது பெற்ற பாடகி மரணம்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்.!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டின் கிராமிய பாடல்களையும், நாட்டுப்புற கலாசாரங்களையும் உயிரோடு பேணிய மகத்தான கலைஞர் ‘கலைமாமணி’ கொல்லங்குடி கருப்பாயி அம்மாள், தனது 99வது வயதில் இயற்கை எய்தி உள்ளார். வயது மூப்பால் சில வாரங்களாக சுகயீனமாக இருந்த நிலையில், இன்று காலமானார் என்ற செய்தி அவரது குடும்பத்தினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


கொல்லங்குடி கருப்பாயி அம்மாள்,வில்லுப்பாட்டு, நாட்டுப்புறக் கோலங்களுடன் கூடிய கிராமிய கலை மூலம் பிரபலமானவர்.  மண்ணின் வாசனை பேசும் அவரது குரலுக்கு ரசிகர்கள் மனதில் தனி அடையாளம் உண்டு. அத்துடன் இவர் பல படங்களில் நடித்தும் உள்ளார்.


குறிப்பாக,1975ம் ஆண்டு இயக்குநர் கௌதமன் இயக்கத்தில் வெளிவந்த “ஆண்பாவம்” திரைப்படத்தின் மூலமாக, திரைத்துறையில் முதன்முதலாக அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் இயற்கை எய்திய செய்தி வெளியான பின்னர், தமிழ்நாட்டு கிராமிய கலை அமைப்புகள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் அவருக்கான அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement