• Apr 17 2026

பிக் பாஸ் டைட்டில் வின்னர் அறிவித்த சில நிமிடங்களில் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா என அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் அவர் நடித்து வரும் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டிற்கு வைல்ட் கார்டு போட்டியாளராக வந்த அர்ச்சனா டைட்டில் வின்னர் என்று அறிவிக்கப்பட்டு அவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு தொகை அளிக்கப்பட்டது.


பிக் பாஸ் அர்ச்சனா நடித்து வந்த  ’டிமான்டி காலனி 2’. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் அர்ச்சனா இந்த படத்தில் ஒரு சிறு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்

இந்த நிலையில், பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா என அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் ’டிமான்டி காலனி 2’ படக்குழுவினர் அர்ச்சனாவுக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.


Advertisement

Advertisement