• Apr 19 2026

"இரை" குறும்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.. குஷியில் படக்குழு

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் குறும்பட உலகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், இயக்குநர் ஜெயசந்திரா ஹஸ்மி இயக்கிய ‘இரை’ குறும்படம், 12வது தக்கா சர்வதேச மொபைல் திரைப்பட விழா (Dhaka International Mobile Film Festival) இல் வெர்டிகல் பிரிவில் (Vertical Category) சிறந்த திரைப்படம் என்ற விருதை வென்றுள்ளது.


இந்த விழாவில் உலகம் முழுவதிலிருந்தும் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் அதிகமான திரைப்படங்கள் போட்டியிட்ட நிலையில், இந்திய குறும்படமான ‘இரை’ இந்த முக்கிய விருதை வென்றுள்ளது என்பது, இந்திய குறும்பட உலகிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.

‘இரை’ குறும்படம், அதன் தலைப்பைப் போலவே ஆழமான கருத்தையும், சமூகத்திற்கான கேள்விகளையும் முன்வைக்கும் படைப்பாக உருவாகியுள்ளது. குறைந்த கால அளவில், வலுவான திரைக்கதை, உணர்ச்சி மிகுந்த காட்சிகள் மற்றும் பார்வையாளரை சிந்திக்க வைக்கும் காட்சிப்படுத்தல் ஆகியவற்றின் மூலம் இந்த படம் தனித்துவமாக மின்னுகிறது.

‘இரை’ பெற்ற இந்த விருது, ஒரு தனிப்பட்ட படத்தின் வெற்றியாக மட்டும் அல்லாமல், இந்திய குறும்பட உலகத்திற்கு கிடைத்த முக்கிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.இந்த வெற்றி, தமிழ் குறும்படங்கள் சர்வதேச அளவில் பேசப்படுவதற்கான புதிய கதவுகளை திறந்துள்ளது.

Advertisement

Advertisement