தமிழ் சினிமாவில் புதுமுக இயக்குநர்களின் முயற்சிகள் தற்போது உலக அளவில் பாராட்டைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில், அறிமுக இயக்குநர் V. ஜஸ்டின் பிரபு இயக்கத்தில் உருவான 'வேம்பு' திரைப்படம் பெரும் கௌரவத்தையும் பெருமையையும் பெற்றுள்ளது.
இத்திரைப்படம் சமீபத்தில் நடைபெற்ற அகமதாபாத் சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டு முக்கியமான விருதுகளைக் கைப்பற்றியுள்ளது. சிறந்த நடிகை மற்றும் சிறந்த நடிகர் ஆகிய பிரிவுகளில் 'வேம்பு' திரைப்படம் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படம் ஒரு சிறிய கிராமப்புறத்தின் பார்வையில் நிகழும் மனிதர்களின் உணர்வுகள், வாழ்க்கைப் போராட்டங்கள் மற்றும் சமூக விரோதங்களை நுணுக்கமாகக் கூறுவதோடு, நம்மை ஆழமான சிந்தனையிலும் ஆழ்த்தியிருந்தது.
அகமதாபாத் சர்வதேச திரைப்பட விழா என்பது உலகளாவிய திரைப்படங்களை கௌரவிக்கும் முக்கிய மேடையாக உள்ளது. இதில் இந்தியா மற்றும் பிற நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படங்கள் போட்டி போடுகின்றன. இந்த வரிசையில் 'வேம்பு' படமும் தேர்வாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது.
Listen News!