மலையாள சினிமாவில் மாஸான நடிப்புத் திறமை மற்றும் சினிமா வரலாற்றின் திறமையான முகம் எனப்படும் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘எம்புரான்’ திரைப்படம், தற்போது இந்திய திரையுலகில் பிரமாண்டமான வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளது.
வெளிவந்த சில வாரங்களுக்குள் உலகம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், தற்போது ரூ.325 கோடியைக் கடந்து, மலையாள திரையுலகில் இதுவரை இல்லாத வசூல் சாதனையைப் படைத்துள்ளது.
‘லூசிபர்’ படத்தின் தொடர்ச்சியாக உருவான ‘எம்புரான்’, பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் உருவானது. லூசிபரில் மோகன்லால் நடித்த கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்றிருந்தது. அந்தக் கதையின் தொடர்ச்சியாக உருவானதே எம்புரான் படம்.
இப்படம் வெளியான நாட்களில் இருந்தே ரசிகர்களிடையே பல எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்தது. அந்தவகையில் ‘எம்புரான்’ திரைப்படம் தற்போது உலகம் முழுவதும் ரூ.325 கோடி வசூலித்து இருப்பதென்பது அனைத்து ரசிகர்களையும் சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது.
Listen News!