• Apr 18 2026

விச்சு மம்மியை டம்மியாக்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி! விசித்ராவின் முகத்திரையை கிழித்த சம்பவம் என்ன தெரியுமா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரையில் இல்லாத அளவிற்கு 18 போட்டியாளர்கள், 2 வீடு, 5 வைல்ட் கார்ட் என்ட்ரி என பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது தான் பிக் பாஸ் சீசன் 7.

இதில் பங்குபற்றிய போட்டியாளர்களுள் நடிகை விசித்ராவும் ஒருவராக காணப்படுகிறார். இம்முறை இவருக்கும் பிக் பாஸ் டைட்டில் வின் பண்ணுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், அவர் இன்றைய தினம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிட் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 50 வயதை கடந்த போட்டியாளராக விசித்ரா காணப்படுவதோடு, பிக் பாஸ் வீட்டில் 95 நாட்களைக் கடந்துள்ளார் என்பதும் ஆச்சரியமான விடயம் ஒன்றாகும்.


பிக் பாஸ் சீசன் 7 இல் பங்குபற்றிய போட்டியார்கள் பலரும் விசித்ராவை மம்மி என்றே அழைப்பார்கள். அவரும் அதற்கு ஏற்ற வகையில் அறிவுரை, சமையல் என அசத்தி வந்தார்.

இந்த நிலையில், பிக் பாஸ் விசித்ராவின் பழைய வீடியோ ஒன்று வைரலாகி, அவர் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும், கமல் பற்றியும் விவாதித்துள்ளமை வைரலாகியுள்ளது.


அதன்படி குறித்த வீடியோவில், விசித்ரா பிரபல சேனல் ஒன்றுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து ரிவியூ சொல்லும் நபராக காணப்படுகிறார். இதன் போது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒருவர் அம்மா மாதிரி என்றால் யாருமே நம்ப மாட்டார்கள் என அவரே கூறியிருப்பார்.

இதன் காரணமாக, பிக் பாஸ் வீட்டில் தனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து அடிக்கடி ஒன்றுமே தெரியாது என கூறிய விசித்ராவின் பொய்யான முகத்திரை  கிழிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு பிக் பாஸ் ரிவியூ செய்யும் நபராக இருந்த விசித்ரா, இத்தனை நாட்களாக அம்மா வேடம் போட்டு அனைவரையும் முட்டாள் ஆக்கியுள்ளார் எனவும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement