• Apr 18 2026

அண்ணாமலைக்கு நடந்த விபத்து; முட்டாள்தனத்தின் உச்சத்தில் பூமர் விஜயா! – டுடே ரிவ்யூ

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இன்றைய எபிசோட்டில், வீட்டிற்கு வந்த ரோகிணி  க்ரிஷ்க்கும் அவரது அம்மாவுக்கும் திட்டுகிறார். மேலும், இனிமேல் முத்து, மீனா அழைத்தாலும் போகக்கூடாது என்று கண்டிஷன் போடுகிறார்.

அதன் பின் அங்கு சிந்தாமணி வர, அவரிடம் நடந்த விஷயங்களை ரோகிணி கூறுகிறார். பின்பு மீனாவை வீட்டை விட்டு விரட்ட வேண்டும் என இருவரும் சேர்ந்து திட்டம் போடுகின்றனர்.

இதற்கிடையில், மீனா ஸ்ருதியின் ரெஸ்டாரண்டுக்கு சென்று, “என்னால மாமாவுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று அத்தை பயப்படுகிறார்” எனக் கூறி வருத்தப்படுகிறார். தன்னை வீட்டை விட்டு வெளியே போகச் சொன்ன விஷயத்தையும் பகிர்கிறார்.


அந்த நேரத்தில் நீத்து அங்கு வந்து, ரவியுடன் தனியாக பேச வேண்டும் என்கிறார். அதற்கு ஸ்ருதி ஐந்து நிமிடம் தான் டைம் என சொல்ல, ரெஸ்டாரண்டில் வேலை செய்த பணத்தை ரவிக்கு கொடுத்து, கன்னத்தில் முத்தம் கொடுத்து செல்கிறார் நீத்து . இதனால் ரவி அப்செட் ஆக இருப்பதை ஸ்ருதி கவனிக்கிறார்.

இறுதியில் , அண்ணாமலை தனது நண்பருடன் பேசிக்கொண்டு செல்லும்போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் வேண்டுமென்றே அவர்மீது மோதிச் செல்கிறார். அதன்பின் அண்ணாமலையை வைத்தியசாலையில் அனுமதிக்கின்றனர். ஆனால் இதற்கெல்லாம் காரணம் மீனாதான் என விஜயா குற்றம் சாட்டுகிறார். இதுவே இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement