சக்ரி டொலெட்டி இயக்கத்தில், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் குமாரின் மாபெரும் ஆக்ஷன் படைப்பு ‘பில்லா 2’ வெளியாகி இன்றுடன் 13 ஆண்டு நிறைவை கொண்டாடி வருகின்றது. 2012 ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி வெளியான இந்த படம், ‘பில்லா’வுக்கு முன்னோட்டமாக உருவாக்கப்பட்டது.
இந்த அதிரடி திரைப்பயணத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை இசைத்துறையில் பெரும் வரவேற்பைப் பெற்றது என்று தான் கூற முடியும் .திரைப்படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களின் மனதில் இன்றும் நிலைத்து நிற்கின்றன. மேலும் ‘பில்லா 2’ திரைப்படத்தில் அஜித் ஸ்டைலான கதாபாத்திரத்தில் கலக்கி இருந்தார் . ஒரு சாதாரண இளைஞனாக இருந்து, சர்வதேசக் குற்றவாளியாக வளர்கிற கதையை தந்திரமான ஸ்கிரீன் பிளே மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.
இந்தப் படம் அஜித் ரசிகர்களிடையே ஒரு கல்டு ஸ்டேட்டஸை பெற்றிருக்கிறது. திரைப்படத்தின் ஒளிப்பதிவு, பின்னணி இசை மற்றும் பில்லா கதாபாத்திரத்தின் மர்மமயமான தோற்றம் இவை அனைத்தும் ரசிகர்களின் நினைவுகளில் இடம்பிடித்துள்ளன.
Listen News!