• May 16 2026

தளபதி 68 படக்குழுவில் உயிரிழந்த முக்கிய பிரபலர்! தமிழ்த் திரையுலகினருக்கு அதிர்ச்சி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக திகழும் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில விஜய்யுடன் சினேகா , லைலாஉள்ளிட்ட மேலும் சிலரும் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் சமீபத்தில் கிச்சா சுதீப், கஞ்சா கருப்பு ஆகியோரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.


அப்பா, மகன் என விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் தளபதி 68, ஹாலிவுட் படமான ஜெமினி மேன் காப்பி என சொல்லப்படுகிறது.

இந்நிலையில்,  தளபதி 68 படத்துடன் தொடர்புடைய பிரபலர் ஒருவர் உயிரிழந்துள்ளாராம். இதனை இயக்குனர் வெங்கட் பிரபு தனது டுவிட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


அதன்படி, தயாரிப்பு குழுமம் AGS நிறுவனத்தில் ஒருவரான ஜாய்சன் என்பவர் உயிரிழந்துள்ளாராம். இதை அறிந்த பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement